பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மாநில பொறுப்பு

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மாநில பொறுப்பு

ஆம்ஸ்டராங்கின் மனைவி பொற்கொடி

பகுஜன் சமாஜ்கட்சியின் மாநிலத் தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்டராங்கின் மனைவி பொற்கொடி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் புதிதாக கட்டி வந்த வீட்டுக்கு அருகிலேயே கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி வழக்கறிஞர்கள் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மேலும், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பெண் தாதா அஞ்சலையும் கைது செய்யப்பட்டார். மேலும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story