வாட்ஸ் அப்பில் இனி 60 வினாடிகளுக்கு ஸ்டேட்டஸ்

வாட்ஸ் அப்பில் இனி 60 வினாடிகளுக்கு ஸ்டேட்டஸ் வைக்கலாம் என்ற புதிய அப்டேட்டையும், மேலும் இரண்டு புதிய அம்சங்களையும் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு வழங்க உள்ளது.
வாட்ஸ் அப்பில் இனி 60 வினாடிகளுக்கு ஸ்டேட்டஸ் வைக்கலாம் என புதிய அப்டேட்ஸ். வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு மேலும் இரண்டு புதிய அம்சங்களை வழங்கவுள்ளது. தற்போது 30 வினாடிகள் கொண்ட வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். ஆனால் அது 60 வினாடிகளாக அதிகரிக்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது. UPI மூலம் விரைவாக பணம் செலுத்துவதற்கு QR குறியீட்டை நேரடியாக ஸ்கேன் செய்வதற்கான ஷார்ட் கட் விருப்பத்தையும் நிறுவனம் வழங்க உள்ளது. தற்போது ஒருவர் பயன்பாட்டில் உள்ள ட்ரைடாட்களைத் தேர்ந்தெடுத்து, QR குறியீட்டை மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும்.

Tags

Next Story