ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - ஐஎன்டியுசி தீர்மானம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் -  ஐஎன்டியுசி   தீர்மானம்

ஐஎன்டியுசி தொழிலாளர் கருத்தரங்கம் 

குளச்சல் துறைமுகம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, தாதுமணல், மதுரை, இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கிரானைட் தொழில்களை, தொழிலாளர்கள் நலனுக்காக தொழிற்சாலைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறந்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தீர்மானம்.

தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மாபெரும் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் தூத்துக்குடி அபிராமி மகாலில் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் பிஜி பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்புசாரா தொழிலாளர் மகளிர் அணி ஞானப்பிரகாசி முன்னிலை வகித்தார்.

ஐ என் டி யு சி மாநில செயல் தலைவர் பி. கதிர்வேல் விளக்க உரையாற்றினார் ஐ என் டியு சி மாநில பொதுச் செயலாளர் வடுவூர் கரிகாலன், தமிழ்நாடு நிலவரி திருநெல்வேலி மாவட்ட கவுன்சில் மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் உமாபதி சிவன், ஐ என் டியு சி மாநில பொதுச் செயலாளர் பி.கே.பெருமாள் சாமி, தூத்துக்குடி மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜகோபாலன், துறைமுக தொழிலாளர் சங்க தலைவர் சந்திரசேகர், ரயில்வே தலைவர் இசக்கி முத்து, கோவில்பட்டி அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் முடிமண் வி. ராமசாமி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாட்டின் 35 கோடி பேர் வேலை பார்த்து, வேலை செய்யும் திறனை இழந்து உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பவர்கள் வீட்டு வேலை மட்டும் செய்யும் பெண்கள் என 105கோடி பேரை காப்பாற்ற வேண்டி உள்ளது. நாட்டில் வேலை செய்யும் 35 கோடி பேரில் அரசு துறை பொதுத்துறை மற்றும் கார்பரேட் நிறுவனங்களில் 2 கோடி பேர் வேலை பார்க்கிறார்கள் என்றார் அவர்களை சார்ந்து வாழ்பவர்கள் 6 கோடி பேர் எனவே 8 கோடி பேர் வாழ்க்கை பாதுகாப்பு வளையத்திற்கு வந்து விடுகிறது அப்படி என்றால் மீதமுள்ள 33 கோடி பேர் தொழிலாளர்களாகவும் விவசாயிகளாகவும் தினக்கூலியாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு எந்தவித வேலைக்கான சட்ட பாதுகாப்பு சமூக பாதுகாப்போ இல்லை. மத்திய மாநில அரசுகள் இவர்களைத்தான் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அதற்காக நல வாரியம் அமைத்து நடைமுறைப்படுத்துகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பயன் கிடைக்கவில்லை அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் பெறுகின்ற அத்தனை உரிமைகளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.

எனவே அதற்கான முறையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கிட மத்திய மாநில அரசுகளை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களை தினக்கோடி தொழிலாளராக கையாளும் போக்கை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழிலாளர்கள் நலன் கருதாமல் பல தொழிற்சாலைகளை மத்திய மாநில அரசுகள் மூடி வருகிறது.

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து அவரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உற்பத்தியை பெருக்கி வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது இதனை ஒரு சமூக பிரச்சனையாக கருதி அரசு சிந்திக்க வேண்டும்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை அரசு மூடியதால் மாவட்டம் முழுவதும் உள்ள 2000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் லாரி டிரைவர், கிளீனர், கடைநிலை ஊழியர்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள்,குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. அரசு இவற்றை கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உயர்ந்திட தமிழக பொருளாதார பெரிய இட தமிழக அரசு விரைந்து உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை காலம் தாழ்த்தாது திறக்க அரசு ஆவணம் செய்ய இந்த கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

தென் மாவட்டங்களில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் இளைஞரிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருவதாலும் சாதிய வன்முறைகளுக்கு இந்த இளைஞர்கள் எளிதில் ஆட்பட்டு விடுவதாலும் சாதிய மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையின்படி தென் மாவட்டங்களில் சாதிய மாதல்களை தடுக்க வேண்டுமானால் இளைஞர்களை கவனத்தை நிலைப்படுத்த பல பெரிய தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்களும் சில ஜாதி அமைப்புகளும் இதனை வலியுறுத்தி வருகின்ற வேலையில் சமூக விரோதிகளுக்கு பயந்து புதிய தொழிற்சாலைகளை திறக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை நீதிமன்றத்தை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது ஆளுகின்ற அரசின் கையாலாகதனமாக உள்ளது.

எனவே செயல்படும் தொழிற்சாலைகளை மூடுவதால் மேலும் பலர் வேலை வாய்ப்பு இழந்து வழி தவறி போக இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. எனவே புதிய தொழிற்சாலையில் தொழில் தொடங்கவும், மூடிய தொழிற்சாலைகளை உடனே திறந்திடவும் மத்திய மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட இந்த கருத்தரங்கம் பொறுப்புடன் வலியுறுத்துகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய நாடு வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தேசத்தின் மீது விரோதம் கொண்ட அந்நிய சக்திகள் பெரும் பலம் கொண்ட தேச விரோத சக்திகள் தொழிற்சாலைகளை இயங்க விடாமல் இந்திய பொருளாதாரத்தை வளர விடாமல் தடுத்து வருகிறது. குறிப்பாக குளச்சல் துறைமுகம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, தாதுமணல், மதுரை, இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கிரானைட் தொழில்கள் தொழிலாளர்கள் நலனுக்காக தொழிற்சாலைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறந்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட இந்த கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டால் மூட்டைப்பூச்சி கிட்ட இருந்து வீட்டை கொளுத்தும் நிலை தான் நமது அரசிடம் உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தை சார்ந்து பல தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளது.மூடப்பட்டுள்ள தாமிர தொழிற்சாலை திறக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story