ஸ்டிக்கர் விதிமுறை: இன்று முதல் அமல்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத துறையின் ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுபவர் மீது அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர் கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் ஊடகம், காவல், மருத்துவம், வழக்கறிஞர், நீதிமன்றம், தலைமை செயலகம், ராணுவம் என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு பயணிக்கின்றனர் இது போன்று பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்ததில் அதில் பலர் போலியாக துறையின் பெயர்களை ஒட்டிக்கொண்டு பயணிப்பது தெரியவந்தது குறிப்பாக பலர் குற்றச் செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் ஊடகம், வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு சுற்றுவதும், அவர்கள் இந்த பெயர்களை வைத்து தவறான பாதையில் செல்வதும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது இது போன்ற குற்றங்களை தவிர்க்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊடகம், மருத்துவம், காவல் என துறையின் பெயர்களை ஒட்ட கூடாது என கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்தனர் அவ்வப்போது சோதனை செய்ததில் தவறான வழியில் ஈடுபடுபவர்கள் இந்த விதிமுறைகளை பெரும்பாலோர் பின்பற்றாதது தெரியவந்தது.

அதனால் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் அந்த விதிமுறைகளை சென்னை போக்குவரத்து போலீசார் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர் இந்த உண்மையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை யாரும் இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் இதுபோன்று ஒட்டக்கூடாது என எச்சரித்துள்ளனர் வாகனத்தில் இருக்கும் ஸ்டிக்கர்களை அகற்ற வரும் 1-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் 2-ம் தேதி முதல், மோட்டார் வாகன சட் டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதிப்படி அபராதம் விதிக்கப்படும் தமிழக அரசின் அனுமதி பெற்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சின்னத்தோடு பெற்ற ஸ்டிக்கரை தனது வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதை தவிர்த்து இன்று முதல் அனுமதி இல்லாமல் ஏதேனும் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகண சட்டத்தின் படி 500 அபராதம் விதிக்கபப்படும் எச்சரிக்கையை மீறி வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் அகற்றவில்லை என்றால் 1500 அபராதம் விதிக்கப்படும்என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story