தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்!!
storm cage 01
சென்னை, நாகை, பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. வங்கக்கடலில் காற்றுழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள சூழலில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை உருவாகும் டானா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களுக்கு கனமழையை கொண்டு வந்தது. இந்நிலையில், அக்டோபர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் புதிதாக ‘டானா’ புயல் மையம் கொள்ளும் எனவும், இது தீவிர புயலாக மாறி அக்டோபர் 24 ஆம் தேதி இரவு கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி, அடுத்த இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 24, வியாழன் அன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய கடலோர மாநிலங்களில் கரையைக் கடக்கும். ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையில் காற்றின் வேகம் அக்டோபர் 23 முதல் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அக்டோபர் 24 இரவு முதல் அக்டோபர் 25 காலை வரை மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மீனவர்கள் அக்டோபர் 23 ஆம் தேதி கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை உருவாகும் டானா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றபட்டுள்ளது. சென்னை, நாகை, பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.