தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாவது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாவது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறி உள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டது.

வங்க கடலில் கடந்த 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ளது .இந்த புயல் வடமேற்கு திசை மேற்கு மத்திய கடல் பகுதியில் நிலை கொண்டு வட கிழக்கு திசை நோக்கி மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது இந்த புயலானது ஒரிசா விற்கு தென்கிழக்கு 210 கிலோ மீட்டரிலும் மற்றும் மேற்கு வங்கத்திற்கு 270 கிலோமீட்டர் தொலைவிலும் பங்களாதேஷிற்கு தென்மேற்கே 350 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது இந்த புயல் பங்களாதேஷ் கடல்பகுதி நோக்கி நகர்ந்து செல்கிறது சென்னை வானிலை மையம் வங்க கடல் பகுதியில் மிக அதிக வேகமாக வீசக்கூடும் மேலும் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறி உள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஹாமூன் தீவிர புயலாக மாறி உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்களும் பாதுகாப்பாக இருக்க மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story