பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்ற எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை
ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏப்ரல் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகையும் அமைய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதனை கருத்தில்கொண்டு, தமிழக அரசு ஏப்ரல் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் தேர்வுகள் இல்லாத வகையில் பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story