திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் முதுநிலை 2ம் ஆண்டு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை என அரசு உத்தரவு உள்ளது. இந்நிலையில் முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு நாளை துவங்க உள்ள நிலையில் எழுத உள்ள மாணவர்களை பல்கலைக்கழ நிர்வாகம் சுமார் 5 ஆயிரம் வரை கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. கட்டணம் செலுத்தவில்லை என்றால் ஹால் டிக்கெட் வழங்க மறுப்பதாகவும் கூறியதால் இதனை கண்டித்தும், இறுதி நேரத்தில் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளதால் பல்கலைக்கழக நிர்வாகம் இத்தகைய போக்கை கைவிட வேண்டும் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக் கூறி பல்கலைக்கழக வளாகத்தில் 15 க்கும் மாணவ, மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர்,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த கட்டணத்தை ரத்து செய்து கொள்வதாகவும், மாணவர்கள் எந்தவித கட்டணமும் கட்ட தேவையில்லை மேலும் நாளை அவர்கள் பருவ தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாகவும், நாளை அவர்கள் தடையின்றி தேர்வு எழுதலாம் என துணைவேந்தர் உத்தரவிட்டார்.