நாமக்கல் அருகே மாணவ கருத்தரங்கம்

கருத்தரங்கத்தில் பங்கேற்றவர்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக மாணவ/ மாணவியர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக English Literary Phrontistery Forum (ELPF) வாயிலாக " Constructive Communication" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் V.L.ஜெயபால் அவர்களும், உதவிப்பேராசிரியர் திரு.I. கிறிஸ்துராஜ் அவர்களும் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திரு.A.சைலஸ் அப்போலோ அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர் P. அபிஷேக் வழங்கினார். தலைமை உரையை கல்லூரி முதல்வர் முனைவர்.கி. வெங்கடாசலம் வழங்கினார். வாழ்த்துறையை ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். எ. திருமலை ராஜா வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.ப.சரவணன் வழங்கினார். நன்றி உரையை முதலாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவர் A. அரவிந்த் வழங்கினார் .
