மாணவர்கள் பேருந்து படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்

மாணவர்கள் பேருந்து படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்

பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் படியில் பயணம் செய்த மாணவர்கள் பலி என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் ஏதோ ஒரு ஊரில் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. இன்று கூட மதுராந்தகம் அருகில் நான்கு மாணவர்கள் பலி என்ற செய்தியை பார்த்த பொழுது வேதனையாக இருந்தது பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் நம் பிள்ளைகளாவது படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வந்துவிட மாட்டார்களா? என்ற கனவுகளுடன் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர் இது போன்ற நிகழ்வுகள் அவர்கள் வாழ்க்கையில் பேரிடியாக விழும். இந்த துன்பத்தை எப்படித்தான் தாங்கி கொள்வார்கள் என்பதை நினைக்கும் பொழுது ஒரு தந்தையாக என் நெஞ்சம் பதைபதைக்கின்றது மாணவ செல்வங்களே வாழ்க்கை என்பது நெடும்பயணம்.

இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து செல்கின்ற பயணம். பேருந்து படிக்கட்டுகளில் பயணத்தினால் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளாதீர்கள் உங்களை இழந்து துடிக்கும் பெற்றோர்களை நினைத்தால் இத்தகைய செயலை செய்யமாட்டீர்கள். பேருந்து படியில் தொங்கி செல்வது வீரம் என பல மாணவர்கள் நினைக்கிறார்கள் ஒரு பேருந்தில் இடமில்லை என்றால் அடுத்த பேருந்திற்காக காத்திருங்கள். சில நிமிடங்கள் காத்திருக்க முடியாமல் நீங்கள் செய்யும் பயணம் எத்தகைய முடிவை தரும் என்பதை செய்திகளின் மூலம் அறிந்திருந்தும் இத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்வது வேதனை தருகிறது உயிர் உன்னதமானது. எவ்வளவோ சாதனை செய்ய பிறந்த நீங்கள் பேருந்து படிக்கட்டு பயணம் மூலம் தெரிந்தே ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாமா? உங்கள் வீரத்தை விளையாட்டிலும் படிப்பிலும் காட்டுங்கள் படிக்கட்டுகளில் வேண்டாம். மாணவர்களின் படிக்கட்டு பயணங்களால் ஏற்படும் மரண செய்திகளை பார்க்கும் பொழுது மிகுந்த வேதனையளிக்கிறது படிப்பில் கவனம் செலுத்துங்கள் படிக்கட்டுகளில் வேண்டாம் என‌‌ கூறியுள்ளார்

Tags

Next Story