கோடை வெயில் தாக்கம்: தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்

கோடை வெயில் தாக்கம்: தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்

உப்பளம் 

தூத்துக்குடியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது இங்கு சுமார் 30,000 ஏக்கரில் தூத்துக்குடி தருவை குளம் வேப்பலோடை ஆறுமுகநேரி முள்ளக்காடு பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது உப்பு உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 50,000 தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதன் காரணமாக வழக்கமாக ஜனவரி மாதம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி துவங்கி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் தான் உப்பு உற்பத்தி துவங்கியது உப்பு உற்பத்தி துவங்கிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை இரண்டு நாட்கள் பெய்ததால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது தற்போது தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மீண்டும் உப்பு உற்பத்தி செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது ஆனால் நல்ல தரமான உப்பு உற்பத்தி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் புதிதாக உற்பத்தி செய்யப்படும் உப்பு விலை ஒரு டன் 2000 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

ஆனால் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள உப்பு ஒரு டன் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த ஆண்டு கால தாமதமாக உப்பு உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில் இன்னும் நாலு மாதங்கள் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யும் காலம் என்பதால் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் குறைவான அளவு உப்பு உற்பத்தியே இருக்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு விலை உயர்ந்து காணப்படுவதால் இங்கிருந்து உப்பை இறக்குமதி செய்யும் கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் தற்போது குஜராத் ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் தமிழகத்தின் வேதாரண்யம் ஆகிய பகுதியில் இருந்து விலை குறைவாக உப்பை வாங்கி வருவதால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story