Vijay: விஜயகாந்த் போல் விஜய்யின் அரசியல் வளர்ச்சி இருக்குமா...? - பக்காவா பிளான் போட்ட விஜய்

vijay, tvk, vijay political party

vijay, tvk, vijay political party

தமிழக அரசியலின் வெற்றிடத்தை நிரப்புவார..? அவரது வாங்கு வங்கி எது..?

Vijay: நாடாளுமன்ற தேர்தல் பரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் அதேவேளையில் அரசியல் கட்சி தொடங்கும் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத, முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான விஜய், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களை கொண்டவராகவும் உள்ளார். விஜய் பற்றிய ஒவ்வொரு தகவலையும் நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். மனதில் பட்டத்தை பளிச்சென கூறும் விஜய் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வர இருப்பதாக பேச்சுகள் அடிப்பட்டன. அதன்படி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் விஜய்.

விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்த நிலையில், கட்சி கொடியையும், சின்னத்தையும் தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்த சூழலில் விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம், தமிழக அரசியலின் வெற்றிடத்தை நிரப்புவார..? அவரது வாங்கு வங்கி எது..? விஜயகாந்த் போல் விஜய்யின் அரசியல் வளர்ச்சி இருக்குமா..? திராவிட கட்சிகளின் நிலை என்ன? என பல்வேறு கேள்விகளும், விவாதங்களும் எழுந்துள்ளன.

முதன் முதலில் விஜய் அரசியல் கட்சி தொடங்க காரணமாக இருந்தவர் இயக்குநரும், அவரது தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் விஜய்க்கு என தனி ரசிகர் மன்றத்தை 1993ம் ஆண்டு தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த ரசிகர் மன்றத்தை விஜய் நற்பணி மன்றமாக மாற்றினார். அது, 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடித்த படங்களில் அரசியல் சாயல் இருந்ததுடன், இதற்கு முன்பு ஆண்ட கட்சிகளை விமர்சித்தும் திரைப்படங்களில் பேசி வந்தார். அதனாலேயே விஜய் படம் ரிலீசாகும்போது சென்சார் கிடுக்குப்பிடிகளை அரசு செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் மக்கள் நலத்திட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்த விஜய் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து வாழ்த்தி நன்கொடை அளித்தார். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாழ்ங்கினார். மாலைநேர வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கிடையே பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், அரசியலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து சைலெண்டாக ஆலோசித்து வந்தார்.

இந்த நலத்திட்ட பணிகளுக்கு முன்னதாக அரசியலில் விஜய் ஆழம் பார்க்க தொடங்கினார். அதாவது, 2022ம் ஆண்டு நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுகவுக்கு போட்டியாக களமிறங்கி சில பகுதியில் வெற்றிப்பெற்றன.

உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து 2 ஆண்டுகளாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான உள் கட்டமைப்புகளை வலுப்படுத்தி கொண்ட விஜய், மக்களவை தேர்தல் வரும் நேரம் பார்த்து தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியை அறிவித்தாலும், அடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக கையாண்டு வருகிறார் விஜய். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளார். அப்படி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தால் மக்களின் மனநிலை மாறும் என்பதை கருத்தில் கொண்டு 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என எண்ணி விஜய் செயல்பட்டு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் ஒருபக்கம் இருந்தாலும், அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு முதல் முயற்சியிலேயே எதிர்கட்சியான தேமுதிகவை நிறுவியவர் விஜயகாந்த். எந்த அளவுக்கு அரசு வேகத்தில் அரசியலில் வளர்ந்தாரோ அதே அளவுக்கு அவரது வீழ்ச்சியும் இருந்தது. ஜெயலலிதா மறைவால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தலைவன் இல்லாத தேமுதிக கட்சியும் பலமிழந்துள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி கொள்ள பாஜக காய்நகர்த்தி வருகிறது.

இப்படியான அரசியல் சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களின் ஆதரவும், பெண்களின் ஆதரவும் விஜய்க்கு இருப்பதால், அதை சரியாக பயன்படுத்தி கொண்டால் விஜய் அடுத்த விஜயகாந்தாக அரசியலில் மிளிர வாய்ப்புகள் ஏற்படலாம். விஜய்யின் தேர்தல் வியூகம், மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெறும் முயற்சிகளே அவரது அரசியல் வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும்.

Tags

Next Story