மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதை ஒட்டி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117 அடியை எட்டியது. இதனால் விவசாயத்திற்கு நீர் திறக்கப்படுவது வினாடிக்கு 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீரின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்பதால் தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story