மாற்றுத்திறனாளிகள் தகவல் குறித்து கணக்கெடுப்பு ஆய்வு
மாற்றுத்திறனாளிகள் தகவல் குறித்து கணக்கெடுப்பு
கணக்கெடுப்பு பணிகளை திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்
திருக்கோவிலுார் நகராட்சியில் மாற்றுத் திறனாளிகளின் தகவல்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை திட்ட அலுவலர் ஆய்வு செய்தார். மாற்றுத் திறனாளிகளின் தகவல்கள் குறித்த கணக்கெடுப்பு பணி மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட தாசர்புரம் பகுதியில் மாற்றுத் திறனாளிகளிடம் மகளிர் திட்ட களப்பணியாளர்கள் தகவல்களை பதிவு செய்தனர்.இதனை மாற்றுத் திறனாளிகள் திட்ட அலுவலர் பழனிசாமி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பதிவு செய்தனர்.
Next Story