வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1709 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தம் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1709 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தம் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1709 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தம் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சி ராணி மற்றும் சுயேச்சைகள் ஆகிய 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 7,53,643 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 66 ஆயிரத்து 118 பெண் வாக்காளர்களும் 86 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 19,847 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் குணம் சட்டமன்றத்தில் 320 வாக்குச்சாவடிகளிலும் அரியலூர் சட்டமன்றத்தில் 306 வாக்குச்சாவடிகளிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் 290 வாக்குச்சாவடிகளிலும் புவனகிரி சட்டமன்றத்தில் 283 வாக்குச்சாவடிகளிலும் சிதம்பரம் சட்டமன்றத்தில் 260 வாக்குச்சாவடிகளிலும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தில் 250 வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 1709 வாக்கு சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்களில் மற்றும் வேட்பாளருடன் படம், பெயர் மற்றும் சின்னத்துடன் கூடிய பட்டியலை இயந்திரத்தில் பொறுத்தும் பணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றதொகுதி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 306 வாக்கு சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் இயந்திரத்தில் பேட்டரி மற்றும் பேப்பர் ரோல் பொருத்தப்பட்டு சரி பார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில், தேசியக் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என வரிசை படுத்தப்பட்டு, அதிலும் அகரவரிசைப்படி பெயர்கள் வரிசைபடுத்தப்பட்ட பட்டியலில் உள்ளவாறு அச்சடிக்கப்பட்ட சின்னம் பதிவு செய்யப்பட்ட பட்டியலை பொருத்தம் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த உடன், அனைத்து இயந்திரங்களும், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ராணுவம் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்படுகிறது.

வருகிற 18-ஆம் தேதி கணணி மூலம் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வாக்குசாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு டன் அனுப்பி வைக்க ப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story