தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா திடீர் ராஜினாமா ! அதிமுகவில் இணைகிறாரா?

தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா திடீர் ராஜினாமா ! அதிமுகவில் இணைகிறாரா?

யுவராஜா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராக நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் யுவராஜா. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த யுவராஜா, ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். காங்கிரஸ் சார்பில் 2011 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய நிலையில், யுவராஜாவும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பை யுவராஜா ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ள யுவராஜா, இளைஞரணி தலைவர் பதவியைத்தான் ராஜினாமா செய்துள்ளேனே தவிர, கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை துறக்கவில்லை. நீண்ட காலம் இளைஞரணி தலைவராக இருந்துவிட்ட காரணத்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே பயணிப்பேன் எனக் கூறி இருக்கிறார்.

இதற்கிடையே அதிமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Tags

Next Story