தமிழகம், புதுச்சேரியில் 83 சதவீத மழைப் பதிவு குறைவு

தமிழகம், புதுச்சேரியில் 83 சதவீத மழைப் பதிவு குறைவு

பைல் படம் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்த கோடைகால பருவமழை 83 சதவிதம் அளவிற்கு குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை பெய்த கோடைகால பருவமழை அளவை பொருத்தவரை 9.4 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 54.7 மில்லி மீட்டர், இயல்பிலிருந்து 83 சதவிகிதம் குறைவாக மழை பொழிவு பதிவாகியுள்ளது.

மாவட்ட அளவில் சென்னையை பொருத்தவரை இயல்பான மழை அளவு 15 மில்லி மீட்டர். கடந்த ஒரு மாத காலத்தில் சென்னையில் மழை பதிவாகாத நிலையில் 100% இயல்பிலிருந்து மாறுபட்டுள்ளது. அதேபோல கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை மழை பதிவாகாத நிலையில் 100% இயல்பிலிருந்து மாறுபட்டுள்ளது.

Tags

Next Story