தமிழக சட்டசபை கூட்டத்தொடர்.. விதிகள் திருத்தம் !
தமிழக சட்டசபை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததையொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.
சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருணாநிதி முதலமைச்சாக இருந்த கால கட்டத்தில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். அந்த நடைமுறை இப்போதும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.