தமிழக முதல்வரிடம் கனிமொழி எம்பி வாழ்த்து

X
முதல்வருடன் கனிமொழி எம்பி
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கனிமொழி எம்பி வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமாக உள்ளிட்ட வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதை தொடர்ந்து வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி எம்பி சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story