தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

பைல் படம்

குடிநீர் விநியோகம் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆலோசனை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது குறித்தும், தட்டுப்பாடின்றி மின் விநியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறைகளின் செயலாளர்கள், மின்வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story