தமிழ்நாடு மீனவர்கள் கைது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிவிப்பில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.
பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும், மாநில விடியா திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கு எல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று தமிழ்நாடு மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.