தமிழ்நாட்டில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு !!

தமிழ்நாட்டில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு !!

மருத்துவக் கல்லூரி

தமிழ்நாட்டில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. மயிலாடுதுறை ,திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாகவும் பெரம்பலூர் ,அரக்கோணம், ராணிப்பேட்டையில் இரண்டாம் கட்டமாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெரும்பாலும் இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படும். 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சென்னை இந்தியாவில் மருத்துவ தலைநகராக மாறியது ஏனெனில் நாடு முழுவதும் இருந்த நோயாளிகளின் நிலையான வருகையை அப்போதிலிருந்தே சென்னை எதிர் கொண்டு வந்துள்ளது. 1835 ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவ கல்லூரி தான் மாநிலத்தில் மருத்துவ படிப்புக்கான முதல் நிறுவனம் ஆகும் இந்தியாவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான மருத்துவ கல்லூரிகளுடன் தமிழ்நாடு நாட்டிலேயே மிகவும் மேம்பட்ட சுகாதார வசதிகளை கொண்டுள்ளது.

கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாட்டின் சுகாதாரம் மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மலிவு விலையில் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதாரமும் சேவைகளை வழங்குவதால் தமிழ்நாடு மிகவும் பிரபலமாக உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ துறை மருத்துவம் சேவை மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ற அனைத்திலுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதில் தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று ஒவ்வொரு மாவட்டமும் மண்டலங்களும் மருத்துவத் துறையில் வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த நிலையை தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாகவும் பெரம்பலூர் அரக்கோணம் ராணிப்பேட்டையில் இரண்டாம் கட்டமாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க உத்தரவுப்பிறப்பித்துள்ளது.

Tags

Next Story