ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story