திருப்பூருக்கு தமிழக கவர்னர் ரவி நாளை வருகை

திருப்பூருக்கு தமிழக கவர்னர் ரவி நாளை வருகை

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருப்பூருக்கு நாளை வருகை தரவுள்ளார்.


தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருப்பூருக்கு நாளை வருகை தரவுள்ளார்.

திருப்பூருக்கு இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகை. திருப்பூருக்கு இன்று (புதன்கிழமை) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தர இருக்கிறார். இதையட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டவர் மற்றும் ஏழை மக்களுக்கு மத்திய அரசின் சார்பாக சூரஜ் திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் முழுவதும் இன்று (புதன்கிழமை) 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 3. 45 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர். என்.ரவி கலந்துகொள்கிறார். சென்னையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இதன் பின்னர் மதியம் உணவு சாப்பிட்டது கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாலை 3.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, 4.45 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story