இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகம் தான்.- தங்கபாலு
செய்தியாளர் சந்திப்பு
திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின், இந்திய நீதிப் பயண பொதுக்கூட்டம், 65 அடி உயர கொடியேற்று விழா, சிலை திறப்புவிழா நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர்கள் பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி, முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவருமான தங்கபாலு சிறப்புரையாற்றினார்.ஆம்பூரில் நடைபயணத்தை துவங்கி திருப்பத்தூரில் முடித்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிலைகளை திறந்த வைத்து 65 அடி உயர காங்கிரஸ் கொடி ஏற்றிய வைத்து சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் , திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொருப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய அளவில் மாற்றம் வரவேண்டும். தமிழகத்தில் வெற்றிக்கூட்டணி தான் மிகப்பெரிய கூட்டணி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தும் தெரியும். சரியான முடிவை எடுப்பார்கள். இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகம் தான். ராகுல் காந்தி சாதிவாரி கணக்கு எடுப்பார். அதன் மூலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த வில்லை. பாஜக கட்சியினரே மோசமான ஆட்சி என்று கூறி வருகிறார்கள். பாஜக வை எதிர்ப்பவர்களை அவர்களின் மீது வழக்கு போடுகிறார்கள். தமிழகத்தில் 40 இடங்களிலும் வெல்லும் எங்கள் கூட்டணி. இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பாஜக ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினால் சுப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.