ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் !

ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு  - முதல்வர் !

மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது, இதில் முதன்மையானது தொழில் துறை" என பேசியுள்ளார்.

மேலும் "உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருகிறார்கள். ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது"என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Tags

Next Story