தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது), பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கியானது 561வது கிளையை ஈரோடு மாவட்டத்தில் திருநகர் காலனியில் ATM/CRM வசதியுடன் துவக்கியுள்ளது. குட்டி ஸ்பின்னர்ஸ் நிர்வாக இயக்குனர் குணசேகரன் அவர்கள் புதிய கிளையை துவக்கி வைத்தார்.
வங்கியின் மண்டல மேலாளர் நடராஜன், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள். புதிய கிளை திறப்பு குறித்து வங்கியின் உயர்நிர்வாகத்தின் அறிவிப்பு வருமாறு: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 561வது கிளையை திருநகர் காலனி, ஈரோடு மாவட்டத்தில் ATM/CRM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது.