தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !!

மழை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரம் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் படுத்தி எடுத்து வந்த நிலையில் பல இடங்களில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் திடீரென மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், கடலூர் ,மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில பகுதிகளில் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story