ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாக குழு கூட்டம்
நிர்வாக குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாக குழு கூட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கி பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார், மாவட்ட பொறுப்பாளர் ஞானசேகர் முன்னிலை வகித்து பேசினார், முன்னதாக மாவட்ட செயலாளர் அருண்கார்த்திக் வரவேற்று தேர்தல் கொள்கை பிரச்சார ஏட்டினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
மண்டல பொறுப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன்நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வட்டார செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். கூட்டத்தில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் குடிநீர் முக்கியத்துவம் பற்றி கருத்துக்களை பதிவு செய்தனர், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 18 வது நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளை கவனத்தில் கொண்டு மக்களுக்கு செய்ய வேண்டிய சில முக்கியமான கோரிக்கைகளை பரிந்துரையாக முன்வைக்க வேண்டி தீர்மானங்கள் இயற்றினர் அதில் அரசையும், மதத்தையும் பிரித்து வைத்து அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும், ஆகஸ்ட் 20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அரசு கடைபிடிக்க வேண்டும்,, தேசிய கல்விக் கொள்கை 20 ஒன்றிய அரசு தீவிரமாக அமல்படுத்த முயல்கிறது கல்வியை தனியார் மயமாக்க விரும்புவதை தடுத்திடவும், அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பிய ஆத்ம நிற்பான் பாரத் திட்டத்தை கைவிட வேண்டும், பாதாள சாக்கடை சுத்தம் செய்து மரணத்தை தழும்பும் மக்களின் துயர் துடைக்கவும், உள்நாட்டு உற்பத்தியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான பொது நிதி இரண்டு விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும், நமது நாடு நீர் நெருக்கடியில் சிக்கி உள்ளது நாடு முழுவதும் 76 விழுக்காடு மக்கள் நீர் பஞ்சத்தில் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, வீட்டு பயன்பாடு விவசாயம் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு சமமாக நீர் வினியோகம் செய்யப்பட வேண்டும், மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து பல்வேறு திருமணங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் அதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுமக்களிடம் கொண்டு செல்ல பாடுபடும், மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் காலநிலை மாற்றம் மற்றும் அறிவியல் சார்ந்த சமூக செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதாக தெரிவித்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சதாசிவம் நன்றி கூறினார்.