ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - வேளாண்மை துறை

ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - வேளாண்மை துறை

தலைமை செயலகம் (பைல் படம்)

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு நடப்பாண்டில் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி, சிறுதானியங்களின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், 2023- 24 முதல் 2027-28 வரையிலான 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என 2023-24 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-24ஆம் ஆண்டில் ரூ.65 கோடி நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், சிறுதானியங்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படும் 25 மாவடடங்களைக் கொண்ட, இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், 2024-25ஆம் ஆண்டிலும் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

Tags

Next Story