உலகத்தரமாகும் தமிழ்நாட்டின் சாலைகள்!
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல்வேறு வழிகளில் நாட்டின் முன்மாதிரியான மாநிலமாக மாறிவருகிறது. அதுமட்டுமின்றி பல துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிக்கு மிகமுக்கிய காரணமாக மாநிலத்தின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு சாலை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பான அறிக்கையில் 4 ஆயிரத்து 984 கோடியில் 577 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு வருவதாகவும், 2,465 கோடி மதிப்பில் ஆயிரத்து 710 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிச் சாலைகளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 610 கோடியில் 4 ஆயிரத்து 581 கிலோ மீட்டர் நீளச் சாலை ஓடுதளப்பாதையாகிறது என்றும், ஆயிரத்து 281 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக உயர்த்தப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.