தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  அறக்கட்டளைகள் சார்பில் சொற்பொழிவு 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்   அறக்கட்டளைகள் சார்பில் சொற்பொழிவு 

சொற்பொழிவில் கலந்து கொண்டவர்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  அறக்கட்டளைகள் சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில், ஔவை தமிழ், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், யு.சுப்பிரமணியம், திவான் பகதூர் தி.மு.நாராயண சாமிப்பிள்ளை மற்றும் காசியா அசீனா நயினார் ஆகிய ஐந்து அறக்கட்டளைகளின் சொற்பொழிவுகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.தனலெட்சுமி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், மொழிப்புல முதன்மையர் முனைவர் ச.கவிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முதல் அமர்வில் “சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்

கு.அழகிரிசாமியின் கதைகளில் மாற்றுச் சிந்தனைகள்” எனும் தலைப்பில், தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் தஞ்சை மாநகரத்தலைவர், முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் பட்டிமன்றப் பேச்சாளர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.கண்ணதாசன், “எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம்” எனும் தலைப்பில், உரையாற்றினார். நிறைவாக, இலக்கியத் துறைத்தலைவர்(பொ) முனைவர் அ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

முதுகலை மாணவர் நா.அரவிந்தன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்துத் துறையின் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர், முதுகலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story