விருகம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை,விருகம்பாக்கம் பகுதியில் 06-வது நாளாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், இன்று காலை 8.00 மணி முதல் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காலையில் நடைபெற்ற வாக்கு சேகரப்பு கிருஷ்ணசாமி சாலையில் தொடங்கி 11-வது செக்டர், ராமசாமி சாலை, பொன்னம்பலம் சாலை, பி.வி. ராஜமன்னார் சாலை, அய்யாவுபுர நாவலர் காலனி, முனுசாமி சாலை என மொத்தம் 30 இடங்களில் வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக அதே பகுதியில் வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளார்.
இந்த தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார் இந்த இரண்டாம் கட்டம் வாக்கு சேகரிப்பு வெங்கட்ராமன் சாலையில் தொடங்கி எம்.ஜி.ஆர்.சிலை, டாக்டர் கானுநகர், ஜெயலலிதா நகர், ராஜீவ்காந்தி நகர்,பெரியார் நகர், நெசப்பாக்கம்,
அன்னை சத்யா நகர் கன்னியம்மன் கோவில் தெரு அதனை தொடர்ந்து,, பிள்ளையார் கோவில் தெரு,பிரபா ஒயின்ஸ், ஏரிக்கரை தெரு மெயின் ரோடு, ராஜிவ்காந்தி நகர், மூவேந்தர் தெரு, அஜந்தா பஸ் ஸ்டாப் நிறுத்தம் என மொத்தம் 20 இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளார் இன்று காலையில் 30 இடங்களுக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்த நிலையில் மேலும் தற்போது 20 இடங்களுக்கு நேரில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
இன்று மட்டும் மொத்தம் 50 இடங்களில் வாக்கு சேகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது விருகம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வரும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது...