படுகர் தின வாழ்த்துக்கள் - செல்வப் பெருந்தகை

படுகர் தின வாழ்த்துக்கள் - செல்வப் பெருந்தகை

செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என நான்கு சீமைக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைதியை போற்றும் வகையில் வெள்ளை கொடி ஏற்றப்படுவது பாராட்டுதலுக்குரியது இத்தினத்தில் படுகர் மக்களின் பாடல்கள் எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், பாட்டு பாடியவர்கள், பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள் அதைத்தொடர்ந்து படுக இன்னிசை கச்சேரி நடைபெறும்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்வார்கள் உலகெங்கிலும் வாழும் படுகர் இன மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இத்தினத்தைக் கொண்டாடும் இன் நன்னாளில் படுகர் தின நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story