மாணவர்களுக்கு தமிழக காங்' தலைவர் வாழ்த்து

மாணவர்களுக்கு தமிழக காங் தலைவர் வாழ்த்து

செல்வப்பெருந்தகை

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் "பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் மாணவர்கள் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்க்கையில் மென்மேலும் உயர்வதற்கு, தமிழ்நாடு அரசு கல்விக்காக வழங்கும் அனைத்துத் திட்டங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தேர்ச்சி பெற வேண்டும். மாணவ, மாணவியர்கள் வெற்றிக்காக முயற்சி செய்த அவர்கள்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story