''சுயமாக நிற்க வேண்டும்'' - செல்வப்பெருந்தகை!

சுயமாக நிற்க வேண்டும் - செல்வப்பெருந்தகை!

செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் தொடங்கியது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ''எவ்வளவு நாள் தான் மற்றவர்களை சார்ந்து இருப்பது, நாம் சுயமாக நிற்க வேண்டும். தோழமை என்பது வேறு, சார்ந்து இருப்பது என்பது வேறு

எதிர்காலத்தில் நாம் சார்ந்து இருக்க போகிறோமா? சுயமாக இருக்க போகிறோமா? என்பதை மனதில் வைத்து தலைவர்கள் பேச வேண்டும்.

எத்தனை காலம் தான் சார்ந்து இருக்க போகிறோம், காங்கிரஸ் இயக்கத்திற்கு என்று வரலாறு உண்டு.'' என தெரிவித்துள்ளார்.


Tags

Read MoreRead Less
Next Story