உணவுப் பொருள் விற்பனை பதிவு சான்று
உணவு
தமிழகத்தில் உணவுப் பொருள் விற்பனை வணிகர்கள் பதிவு சான்று பெறுவது அதிகரிப்பு - மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் இணையதளம் உருவாக்கப்பட்ட பிரத்யேக (https://foscos.fssai.gov.in/) மூலம் உரிமம்,பதிவுச்சான்றினை விண்ணப்பித்தல்,வழங்குதல் ஆகிய செயல்பாடுகள் கடந்த ஜூன் 2013 முதல் நடைமுறையில் உள்ளது. உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்கீழ் அனைத்து உணவு வணிகர்களும் தங்களது விற்றுக்கொள்முதல் வரையறையை பொறுத்து பதிவுச்சான்று / மாநில உரிமம் / மத்திய உரிமம் பெறவேண்டும் குறிப்பாக ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.அதேபோல் ரூ.12 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மாநில உரிமம் பெற வேண்டும்.ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மத்திய உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயம். அந்த அடிப்படையில் உணவு பொருட்கள் விற்பனை பதிவு சான்று கடந்த ஒரு ஆண்டில் 90,006 நிறுவனம் பெற்றுள்ளது . மொத்தமாக தமிழகத்தில் 5,55,769 பதிவு சற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வழங்கி உள்ளனர் இவை கடந்த ஆண்டை விட 19.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் 12 லட்சம் முதல் 20 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் 12,887 உணவு நிறுவனம் கடந்த ஒரு ஆண்டில் மாநில உரிமம் பெற்றுள்ளார் தமிகத்தில் தற்போது மொத்தமாக 1,28,092 நிறுவனம் மாநில உரிமம் பெற்றுள்ளது இவை கடந்த ஆண்டை காட்டில் 11.2 விழுக்காடு அதிகரிப்பு என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 23 24 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story