சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை - உயர்நீதிமன்றம் யோசனை

தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து நாட்டின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கேட்டறிந்த பிறகு, கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி லோக் சத்தா கட்சி, தே.மு.தி.க, மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற தகவல்களை சேகரித்து வருவகிறோம் 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கியுள்ளன. மீதமுள்ள மாநிலங்களிடமிருந்து விளக்கங்களை பெற வேண்டி உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேரலை செய்ய முடியாவிட்டால் 5 நிமிடம் காலதாமதமாக சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிப்பரப்பாலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

Tags

Next Story