மலேசியாவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் தஞ்சை ருத்ரன் சிலம்ப பள்ளி மாணவர்கள் விவேக், சூர்ய பிரகாஷ் தங்கம் வென்றனர்.


மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் தஞ்சை ருத்ரன் சிலம்ப பள்ளி மாணவர்கள் விவேக், சூர்ய பிரகாஷ் தங்கம் வென்றனர்.

மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய தேசிய சிலம்பாட்டக் கழகம், ஜெர்மனி நாட்டில் உள்ள சர்வதேச அனைத்து விளையாட்டு கூட்டமைப்பில் இணைந்து, சர்வதேச சிலம்பாட்டக் கழகத்தை துவக்கி, முதல் அனைத்துலக நடுவர்கள் முகாமை சென்னையில் சென்ற மாதம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து சர்வதேச சிலம்பாட்ட போட்டியை மலேசியா நாட்டின், சிலாங்கூர் மாநிலம், செம்பாங் மாவட்டம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பந்தர் பாரு சலாக் திங்கி உள் விளையாட்டு அரங்கத்தில் சென்ற வாரம் நடத்தியது.

இந்தியா, மலேசியா, இலங்கை, கத்தார் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் 50க்கு மேற்பட்ட சர்வதேச நடுவர்களும் கலந்து கொண்டனர். மே 25 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் ஒற்றை கம்பு, ஈட்டி, குத்து வரிசை, வாள் கேடயம் மற்றும் சிலம்பச் சண்டை போட்டி பல்வேறு வயதுப்பிரிவுகளிலும், உடல் எடைப் பிரிவுகளிலும் நடைபெற்றது. இந்தியாவின், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக பலர் கலந்து கொண்ட நிலையில், தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச நடுவர் கரந்தை பரமேஸ்வரி, கரந்தை ருத்ரன் சிலம்ப பள்ளி நிறுவனரும், இந்திய தேசிய, சர்வதேச நடுவருமான கார்த்திக், அவரது மாணவர்கள் விவேக், சூரிய பிராகாஷ் இவர்களுடன் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக அணி மேலாளராக தஞ்சை ஜலேந்திரன் ஆகியோர் இப்போட்டிக்காக மலேசியா சென்றிருந்தனர்.

விவேக் தங்கம் வென்றார் 21 முதல் 30 வயதினருக்கான போட்டியில் 59 முதல் 68 கிலோ வரை உள்ள உடல் எடைப்பிரிவில் கலந்து கொண்ட தஞ்சை விவேக் சிலம்ப சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், குத்து வரிசை போட்டியிலும் கலந்து கொண்ட இவர், அதிலும் தங்கப்பதக்கத்தை வென்றார். சூரியபிரகாஷுக்கும் தங்கம் சப் ஜூனியர் பிரிவு 13 முதல் 15 வயதினருக்கான போட்டியில் 44 முதல் 53 கிலோ வரை உள்ளஉடல் எடைப்பிரிவு குத்து வரிசை போட்டியில் தஞ்சை, கரந்தை ருத்ரன் சிலம்பப் பள்ளி பயிற்றுநர் கார்த்திக்கின் மகன் சூரிய பிரகாஷ் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை பெற்றார். அது மட்டுமல்லாது சிலம்ப சண்டை போட்டியிலும் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பாராட்டு வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் இருவரையும், தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் முத்துராமன், போட்டி இயக்குனர் விக்டர் குழந்தை ராஜ், சிலம்பாட்டக் கழக சேலம் மாவட்ட செயலாளர் சிலம்பொலி ரத்னகுமார், சக சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் பாராட்டினர்.

Tags

Next Story