127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு! வேளாண் பட்ஜெட் தாக்கல் !

127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு  இலக்கு! வேளாண் பட்ஜெட் தாக்கல் !

வேளாண் பட்ஜெட் தாக்கல் !

2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

வேளாண் அறிக்கையின் அம்சங்கள்:

  • 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
  • ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும்.

Tags

Next Story