வரியில்லா பட்ஜெட் - மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியில் வரியில்லாத பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் இன்று தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் , மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பெற்று கொண்டார்

. இதில் இந்த பட்ஜெட்டில் எந்தவிதமான வரி விதிக்கும் இன்றி வரியில்லாத பட்ஜெட்டாக இருந்தது இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த மாதம் பெய்த அதிக கன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கையும் மழை பெய்த பின்பும் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஒரு வாரத்திற்குள் தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் மழை நீர் அகற்றப்பட்டது.

துரித நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ளை நிறத்தில் இங்கு பணியாற்றிய கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் உள்ளுர் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 17 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் மழை நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமாருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, நிர்மல்ராஜ், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன் செயற்பொறியாளர் சரவணன் உதவி ஆணையர்கள் சேகர், சந்திரமோகன், பிரின்ஸ், தனசிங், திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், கீதா முருகேசன், முத்துவேல், ரங்கசாமி, மெட்டில்டா டேனியல், ஜாக்குலின் ஜெயா செல்வகுமார், அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடிண்டா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story