கலந்தாய்வுக்கு 87,479 விண்ணப்பங்கள்

கலந்தாய்வுக்கு 87,479 விண்ணப்பங்கள்

ஆசிரியர்கள்

நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82 ஆயிரத்து 479 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82,479 விண்ணப்பங்கள் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறையால் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் 18,920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும் 9,295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 5,814 விண்ணப்பங்கள் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 1,640 விண்ணப்பங்கள் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35,669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

இவ்விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பின்னர் பதவிவாரியாக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் , மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story