தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு
வெப்பம் குறைய வாய்ப்பு
அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்தமிழகம் மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து தினங்களைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story