தமிழகத்தில் இன்று மூன்று இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது

தமிழகத்தில் இன்று மூன்று இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது

 வெப்பநிலை

இன்றும் நாளையும் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் உடைய வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 12ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக வெப்ப காற்று வீசுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை அளவு அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகத்தில் ஈரோடு ,கரூர் பரமத்தி, மற்றும் சேலம் ஆகிய மூன்று இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 101.48° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags

Next Story