திருச்செந்தூர் கோயிலில் தங்கரதம் புறப்பாடு தற்காலிக நிறுத்தம்!
தங்கரதம்
திருச்செந்தூர் கோயிலில் தங்கரதம் புறப்பாடு 17ஆம் தேதி முதல் தற்காலிக நிறுத்தம்!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 17ஆம் தேதி முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் மாலை 06.00 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. இத்திருக்கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் வரும் 2024 கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு திருக்கோயில் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைதளம் பணிகள் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பின்பு திருக்கோயில் தெற்கு மற்றும் மேற்கு பிரகாரம் தரைதளம் பணிகள் நடைபெற உள்ளது. மேற்படி பணிகள் நடைபெற இருப்பதால், 17.07.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கரதம் புறப்பாடு வழக்கம் போல் நடத்தப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story