பத்து பேர் இருட்டு அறையில் வைத்து தாக்கினர் : சவுக்கு சங்கர்

பத்து பேர் இருட்டு அறையில் வைத்து தாக்கினர் :  சவுக்கு சங்கர்

பைல் படம்

24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜாமீன் மனு மீதான தேதி இன்னும் குறிப்பிடாமல் உள்ளது எனவும் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்தார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் வழக்கறிஞர் விஜயராகவன் பேசியதாவது, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் கொடுத்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

சவுக்கு சங்கர் யுடியூப் வாயிலாக பெண்களை கொச்சைப்படுத்தியதாக வீரலட்சுமி என்பவர் தொடர்ந்து வழக்கு உள்ளிட்ட இரண்டு வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கைது செய்ய நீதிபதி ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் அதன் அடிப்படையில் அவர் தாக்கியது குறித்து விசாரணை நடைபெறும் எனவும் பத்து நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதி இடம் தெரிவித்திருக்கிறார். தாக்கப்பட்டது குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வதாகவும் தைரியமாக இருக்கும்படி சவுக்கு சங்கரிடம் நீதிபதி தெரிவித்ததாகவும் கூறினார்.

இனிமேல் யுடியூப்பில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறியதாக தெரிவித்தார். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் எனவும் நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கிறார். 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜாமீன் மனு மீதான தேதி இன்னும் குறிப்பிடாமல் உள்ளது எனவும் தெரிவித்தார். ஏற்கனவே அவரை கோயம்புத்தூர் சிறையில் கொடுரமாக தாக்கி உள்ள நிலையில் மீண்டும் அவரை அங்கே கொண்டு செல்கின்றனர் என தெரிவித்தார்

Tags

Next Story