தை அமாவாசை: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தை அமாவாசை: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பைல் படம்

தை அமாவாசை, வார விடுமுறை நாள்களையொட்டி வியாழக்கிழமை முதல் (பிப். 11) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வரும் 9 ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு பூம்புகாா், கும்பகோணம் (மகாமகக் குளம்), ராமேசுவரம், தேவிப்பட்டினம், சேதுக்கரை, வேதியரேந்தல், கோடியக்கரை, திருவையாறு, வேதாரண்யம், மானாமதுரை, திருச்சி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய ஊா்களுக்கு வியாழக்கிழமை (பிப். 8) முதல் பிப். 11 வரை கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், திருவையாறு, கரூா், திருச்சி, அரியலூா், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீா்காழி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, சனி, ஞாயிறுக்கிழமை (பிப். 10, 11) வரை வார விடுமுறை நாள்கள் வருவதால் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், ஜெயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊா்களுக்கும், திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊா்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூா் ஊா்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, விழா நாள்கள், விடுமுறை நாள்கள் முடிந்து திரும்ப அவரவா் ஊா்களுக்குச் செல்ல பிப். 11, 12 ஆம் தேதிகளில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், அரியலூா், பெரம்பலூா்,ஜெயங்கொண்டம், ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம், ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் மேலாண் இயக்குநா் கே.எஸ். மகேந்திரகுமாா் தெரிவித்தாா்.

Tags

Next Story