பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசையுடன் தாய் மாமன்கள்
சேலத்தில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டு சென்ற தாய் மாமன்கள்
சேலத்தில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டு சென்ற தாய் மாமன்கள்
பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்று வழங்கியதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பருவமடையும்போது, தாய்மாமன்கள் சீர் கொடுப்பது தொன்று தொட்டு கடை பிடிக்கப்பட்டு வந்தது. சேலம் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்-விமலா (33) தம்பதியின் மகள் திவ்யா பூப்பெய்தியதை தொடர்ந்து பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி, விமலாவின் தம்பிகளான அயோத்தியாப்பட்டணம் அடுத்த தாதம்பட்டி பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26), சூர்யா (23) ஆகியோர் மேளதாளம் முழங்க பண்டபாத்திரங்கள், வெற்றிலை-பாக்கு, பழம் மற்றும் சீர்வரிசையை மாட்டு வண்டியில் கொண்டு சென்று வழங்கினர். பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை அயோத்தியாப்பட்டணம் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
Tags
Next Story