தை அமாவாசை வழிபாடு: கடற்கரையில் திரளானோர் தர்ப்பணம்

தை அமாவாசை வழிபாடு: கடற்கரையில் திரளானோர் தர்ப்பணம்

தர்பணம் கொடுத்தவர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திரளான இந்துக்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர்.

அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதேபோல் தூத்துக்குடியில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags

Next Story