ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி

ஆம்னி பேருந்து 

தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வெளி மாநில பதிவுபெற்ற ஆம்னி பேருந்துகள் (14.06.2024) முதல் தமிழகத்தில் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இன்று இது சம்பந்தமாக போக்குவரத்து ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கால அவகாசம் வழங்க மறுக்கப்பட்டது.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வெளி மாநில பதிவுபெற்ற ஆம்னி பேருந்துகள் (14.06.2024) முதல் தமிழகத்தில் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இன்று இது சம்பந்தமாக போக்குவரத்து ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கால அவகாசம் வழங்க மறுக்கப்பட்டது. பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து தொடர் விடுமுறை காரணமாக கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, போக்குவரத்து துறை ஆணையர் அவர்களும் அமைச்சர் அவர்களும் பரிசீலனை செய்து தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி வரும் (18.06.2024) செவ்வாய்க்கிழமை காலை வரை தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளனர். எனவே போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags

Read MoreRead Less
Next Story